Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் மூன்று கரையோரப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களில் நச்சுக் கிருமி

சிங்கப்பூரின் மூன்று கரையோரப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களில் நச்சுக் கிருமி காணப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் மூன்று கரையோரப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களில் நச்சுக் கிருமி காணப்பட்டுள்ளது.

அந்தக் கிருமியால், காயங்களில் தொற்றும், வயிற்றுப்போக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் இன்று (பிப்ரவரி 11) தெரிவித்தது.

லஸாரஸ் தீவு, செம்பவாங் கடற்கரை, சாங்கி கடற்கரை என்று பொதுமக்கள் அதிகம் சென்றுவரும் இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களில் 400க்கும் மேற்பட்ட கிருமி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூலை வரை பல்கலைக்கழகக் கடல் துறை ஆய்வாளர்கள் பிளாஸ்டிக் துகள்களைச் சேகரித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பவளப்பாறைகளைப் பாதிக்கும் கிருமி வகையும் பிளாஸ்டிக் துகள்களில் காணப்பட்டது. அது சிங்கப்பூரின் தெற்குக் கரை அருகில் உள்ள பவளப்பாறைகளுக்குக் கேடு விளைவிக்கும்.

என்றாலும், பிளாஸ்டிக்கில் காணப்பட்ட எல்லா கிருமிகளும் ஆபத்தை விளைவிப்பதில்லை.

பிளாஸ்டிக்குகளைச் சிதைக்கும் கிருமிகளும் எண்ணெய் கசிவைச் சுத்தம் செய்ய உதவும் கிருமிகளும் பிளாஸ்டிக் துகள்களில் காணப்பட்டன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்