Images
  • TPG
    (படம்:  CNA/Jeremy Long)

தொலைத்தொடர்புச் சேவைகளில் பின்தங்கிய TPG

விரைவில் அறிமுகம் செய்யப்படும் புதிய தொலைத்தொடர்பு நிறுவனம் TPG மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கைப்பேசிச் செயல்பாட்டை ஆராயும் Opensignal எனும் நிறுவனம் அந்தத் தகவலை நேற்று (ஜூலை 12) வெளியிட்டது.

அது பிப்ரவரி முதல் மே வரை சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாட்டு குறித்தத் தகவலைச் சேகரித்தது.

பதிவிறக்க வேகத்தின் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிலை:

முதலாவது: Singtel (42.5 Mbps)
இரண்டாவது: StarHub (39.5 Mbps)
மூன்றாவது: M1 (36.1 Mbps)
நான்காவது: TPG (26.1 Mbps)

பதிவேற்ற வேகத்தின் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிலை:

முதலாவது: M1 (13.4 Mbps)
இரண்டாவது: Singtel (12.7 Mbps)
மூன்றாவது: StarHub (12.4 Mbps)
நான்காவது: TPG (5.1 Mbps)

சமிக்ஞை இல்லாத நேரங்களின் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிலை:

முதலாவது: TPG (4.5%)
இரண்டாவது: M1 (1.6%)
மூன்றாவது: StarHub (1.2%)
நாங்காவது: Singtel (1%)

TPG பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகியவற்றுக்கான வேகத்தில் ஆக மெதுவாகக் காணப்பட்டது. சமிக்ஞை இல்லாத சமயங்களில் நிலைமை வேறாக உள்ளது.

12-மாதச் சோதனைக் காலத்தின்போது TPG பயனீட்டாளர்களுக்கு வழங்கும் இலவச சேவையின் அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

Top