Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதியோருக்கான இலவசக் கைத்தொலைபேசித் திட்டம் - TPG Telecom அறிமுகம்

சிங்கப்பூரின் 4வது தொலைத் தொடர்பு நிறுவனமாக அறிமுகமாகவுள்ள TPG Telecom முதியோருக்காக ஓர் இலவசக் கைத்தொலைபேசித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

வாசிப்புநேரம் -
முதியோருக்கான இலவசக் கைத்தொலைபேசித் திட்டம் - TPG Telecom அறிமுகம்

(படம்: CNA/Jeremy Long)


சிங்கப்பூரின் 4வது தொலைத் தொடர்பு நிறுவனமாக அறிமுகமாகவுள்ள TPG Telecom முதியோருக்காக ஓர் இலவசக் கைத்தொலைபேசித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

65உம் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய முதியோர் அதனால் பயன்பெறுவர்.

முதல் 24 மாதங்களுக்கு, திட்டம் அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ஒரு சிம் அட்டை, மாதத்திற்கு 3GB அளவுள்ள இணைய வசதி, உள்ளூர் கைத் தொலைபேசிகளுக்கான எண்ணற்ற இலவச அழைப்புகள் ஆகியவை அடங்கும்.

கைத்தொலைபேசியின் மூலம் முதியோர் கூடுதல் பயன் பெறவேண்டும் என்பது திட்டத்தின் நோக்கம் என்று நிறுவனம் கூறியது.

அரசாங்கத்தின் அறிவார்ந்த தேசத் திட்டத்திற்கு அளிக்கும் ஆதரவின் ஓர் அங்கமாக நிறுவனம் புதுக் கைத்தொலைபேசித் திட்டத்தைக் கருதுகிறது.

முதியோருக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் பொதுவான சில கவர்ச்சிகரமான கைத் தொலைபேசித் திட்டங்களை விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதாகவும் TPG நிறுவனம் குறிப்பிட்டது.

இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் தனது சேவைகளைத் தொடங்கும் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் அது நம்பிக்கை தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்