Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'TraceTogether' செயலி ஊடுருவப்பட்டதாகப் பரவும் பொய்த் தகவலை நம்பவேண்டாம்

'TraceTogether' செயலி ஊடுருவப்பட்டதாகப் பரவும் பொய்த் தகவலை நம்பவேண்டாம்

வாசிப்புநேரம் -

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருந்தவர்களைக் கண்டறிய உதவும் புதிய 'TraceTogether' செயலி ஊடுருவப்பட்டதாகப் பரவும் பொய்த் தகவலை நம்பவேண்டாம் என்று செயலியின் நிர்வாகக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மோசடி அழைப்புகளுக்கும் பலியாகவேண்டாம் என்று அது கூறியது.

சுகாதார அமைச்சிலிருந்து அழைப்பதாகக் கூறி, கைத்தொலைபேசியில் எண் '9'-ஐ அழுத்தச் சொல்லும் மோசடி அழைப்பு, அவற்றுள் ஒன்று.

பயனீட்டாளர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல் ஏதும் இருந்தால், அது ஊடகம் வழி பகிரப்படும் என்று செயலியின் நிர்வாகம் தெரிவித்தது.

COVID-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக 'TraceTogether' செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை 600,000-க்கு மேற்பட்டோர் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்