Images
  • traceTogether
    (கோப்புப் படம்: Ooi Boon Keong)

மீண்டும் தொடங்கிய TraceTogether கருவிகளின் விநியோகம்..மார்சிலிங் சமூக மன்றத்தில் நீண்ட வரிசை

மார்சிலிங் சமூக மன்றத்தில் TraceTogether கருவிகளை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொண்டுள்ளனர்.

நேற்று ஒருநாள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கருவிகளின் விநியோகம் இன்று மீண்டும் தொடங்கியது.

சமூக மன்றம் திறப்பதற்கு முன்னரே சில குடியிருப்பாளர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கிவிட்டனர்.

TraceTogether கருவியைப் பெற்றுக்கொள்ள சுமார் 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாகக் குடியிருப்பாளர்கள் சிலர் CNA-யிடம் தெரிவித்தனர்.

முன்பு அதனை எந்தச் சமூக மன்றத்திலிருந்து வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் சில சமூக மன்றங்களில் கூட்டம்
அலைமோதியதால் அந்த நடைமுறை கைவிடப்பட்டது.

தற்போது பொதுமக்கள் தங்கள் சொந்தத் தொகுதியின்கீழ் உள்ள சமூக மன்றங்களிலிருந்து மட்டுமே கருவிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இன்று மார்சிலிங் சமூக மன்றத்தில் தொடங்கிய விநியோகம் படிப்படியாக மற்ற சமூக மன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.   

Top