Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சுமார் 10,000 மூத்தோருக்கு, தங்களுடன் நேரடித் தொடர்பில் வந்தவர்களை அடையாளம் காணும் கண்காணிப்புக் கருவி

COVID-19: சுமார் 10,000 மூத்தோருக்கு, தங்களுடன் நேரடித் தொடர்பில் வந்தவர்களை அடையாளம் காணும் கண்காணிப்புக் கருவி

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சுமார் 10,000 மூத்தோருக்கு, தங்களுடன் நேரடித் தொடர்பில் வந்தவர்களை அடையாளம் காணும் கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மாதத்திலிருந்து விநியோகம் செய்யப்பட்ட அந்தக் கருவிகள் மூத்தோருடன் நெருங்கிய தொடர்பில் வந்தவர்களின் தகவல்களை Bluetooth மூலமாகப் பதிவு செய்யும்.

திறன்பேசிகளையும் TraceTogether செயலியையும் பயன்படுத்தாத மூத்தோர், அடையாளம் காணும் கருவியை வைத்திருப்பது பாதுகாப்பான உணர்வைத் தருவதாகத் தெரிவித்தனர்.

தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தாதோர், உடலளவில் பலவீனமானோர்தனிமையில் வசிப்போர், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தோர் என பலதரப்பு மூத்தோருக்குக் கருவி கைகொடுக்கிறது.

கருவியை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதை மூத்தோர் அலுவலகத் தொண்டூழியர்கள் அவர்களுக்கு விளக்கி வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்