Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் 450,000 பேருக்குத் தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்

வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் 450,000 பேருக்குத் தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படவிருக்கின்றன. வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் 450,000 பேருக்குத் தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் 450,000 பேருக்குத் தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்

(படம்: Mediacorp)

வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் 450,000 பேருக்குத் தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படவிருக்கின்றன. வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் 450,000 பேருக்குத் தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படவிருக்கின்றன.

தங்கும் விடுதிகளில் இருப்பவர்கள் அல்லது அங்கு வேலை செய்பவர்கள் ஆகியோருக்கும் கட்டுமானம், கப்பல் பட்டறைகள் போன்ற துறைகளில் வேலை செய்வோருக்கும் கருவிகள் வழங்கப்படும்.

ஊழியர்கள் கருவிகளை எந்நேரமும் வைத்திருந்தால், அவர்கள் மத்தியில் COVID-19 நோய்த்தொற்று இருப்பவர் அடையாளம் காணப்படும்போது, நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (அக்டோபர் 18) கட்டங்கட்டமாக வழங்கப்படும் கருவிகள் அடுத்த மாதத் தொடக்கத்திற்குள் கொடுத்து முடிக்கப்படும் என்றது மனிதவள அமைச்சு.

BluePass எனப்படும் கருவிகள் தங்கும் விடுதி, கட்டுமானத் தளங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சிறியதாகவும், தண்ணீர் நுழையமுடியாத வகையிலும் இருக்கும்.

TraceTogether செயலியுடன் அவை இணைந்து செயல்படுகிறது என்றும் கைக்கடிகாரத்தைப் போலவே அவற்றை அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மற்ற BluePass கருவிகளிடமிருந்து மட்டுமே தரவு சேகரிக்கும் கருவி, வேறெந்தத் தனிநபர் தகவலையும் சேகரிக்காது.

இந்த ஆண்டு, கருவிகள் இலவசமாக வழங்கப்படும்.

தங்கும் விடுதிகளிலும் வழக்கமான பரிசோதனைகள் நடக்கும் நிலையங்களிலும் கருவிகள் விநியோகிக்கப்படும்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்