Images
  • food
    படம்:  Unsplash/Asiya Kiev

அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தைத் தடையின்றித் தொடர சிங்கப்பூர் உள்ளிட்ட 7 நாடுகள் உறுதி

அத்தியாவசியத் தேவைகள் உள்பட, பொருள்களின் விநியோகத்தைத் தடையின்றித் தொடர, ஏழு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.

சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா, புரூணை, கனடா, சிலி, மியன்மார், நியூஸிலந்து, ஆகியவற்றின் வர்த்தக அமைச்சர்கள் அதுகுறித்த கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

துறைமுகங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; அதே வேளையில் விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அவற்றால் பாதிப்பு நேர்ந்துள்ள நிலையில்,
நாடுகளின் நலனை முன்னிட்டு, வர்த்தகக் கடனுதவிகள் தொடர்வதை உறுதிசெய்ய அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவப் பொருள்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதோ, வரி விதிப்பதோ கூடாது என்பதன் தொடர்பிலும் அவர்கள் இணங்கியுள்ளனர்.

COVID-19 கிருமிப்பரவலைத் திறம்பட எதிர்கொள்வதில் அது முக்கிய படி என்று சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு கூறியது.

மருத்துவக் கருவிகளின் உற்பத்தி பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளதை அது சுட்டியது. 

Top