Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"பாரம்பரியக் கைவினைத் தொழில்கள் பற்றிய கருத்தை மாற்ற மக்களின் மனப்போக்கில் மாற்றம் தேவை"

பாரம்பரியக் கைவினைத் தொழில்கள் என்றாலே அவற்றுக்குக் கடின உடலுழைப்பு தேவைப்படும் என்ற கருத்து நிலவுகிறது.

வாசிப்புநேரம் -

பாரம்பரியக் கைவினைத் தொழில்கள் என்றாலே அவற்றுக்குக் கடின உடலுழைப்பு தேவைப்படும் என்ற கருத்து நிலவுகிறது.

நீண்ட நேரம் வியர்வை சிந்தி உழைக்க தற்போதுள்ள இளம் தலைமுறையினர் விரும்புவதில்லை என்கின்றன, அத்தகைய தொழில்களில் ஈடுபடுவோருக்கான சங்கங்கள்.

சில தொழில்களுக்கு உரிமம் தேவைப்படுகிறது.

உரிமம் இல்லாமல் சிலர் குறைந்த கட்டணத்துக்குப் பணிகளை மேற்கொள்வது, சில தொழில்களைப் பாதிப்பதாகக் கூறப்பட்டது.

பயனீட்டாளர்கள் கவனமாகத் தெரிவுகளைச் செய்வது அவசியம் என்று சங்கங்கள் நம்புகின்றன.

பாரம்பரியத் தொழில்களின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய வேண்டும்.

அவற்றைப் பற்றிய கருத்து மாறுவதற்கு, ஆழமாகப் பதிந்துள்ள மனப்போக்குகளில் மாற்றம் தேவை என்று கூறப்பட்டது.

சான்றளிப்பு முறைகளை உருவாக்குவது மற்றொரு வழி.

பாரம்பரியத் தொழில்களில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி இளையர்களுக்கு மேம்பட்ட முறையில் எடுத்துரைப்பதும் ஒரு வழி.

பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் அது மேற்கொள்ளப்படலாம் என்கின்றன சங்கங்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்