Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வர்த்தகச் சின்னங்களின் பதிவுக்கான உலகின் முதல் செயலி இங்கு அறிமுகம்

சிங்கப்பூர், வர்த்தகச் சின்னங்களைப் பதிவுசெய்வதற்கான உலகின் முதல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
வர்த்தகச் சின்னங்களின் பதிவுக்கான உலகின் முதல் செயலி இங்கு அறிமுகம்

(படம்: IPOS)

சிங்கப்பூர், வர்த்தகச் சின்னங்களைப் பதிவுசெய்வதற்கான உலகின் முதல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

IPOS Go எனும் அந்தச் செயலியை, சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகம் உருவாக்கியுள்ளது.

செயலியின் மூலம் வர்த்தக நிறுவனங்கள் நேரடியாக மதிநுட்பச் சொத்து அலுவலகத்திடம் பதிவுசெய்யலாம்.

தற்போதைய முறையில் ஒரு வர்த்தக நிறுவனச் சின்னத்தைப் பதிவுசெய்யச் சராசரியாக முக்கால் மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் ஆகிறது.

புதிய செயலியின் மூலம் பத்தே நிமிடத்தில் பதிவுசெய்ய இயலும்.

செயலி மூலமான பதிவை ஊக்குவிக்கும் நோக்கில், பதிவுக் கட்டணங்களும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவாற்றலைப் பயன்படுத்தி, நிறுவனங்கள் தங்களது சின்னங்களைப் போன்றே தோற்றமளிக்கும் மற்ற வர்த்தக நிறுவனச் சின்னங்களை விரைவில் அடையாளம்காண புதிய செயலி வகைசெய்யும்.

உலக அளவில் நிறுவனங்கள் அவற்றின் வெற்றிக்கு முக்கியமாகக் கருதும் வர்த்தகச் சின்னங்களைப் பதிவுசெய்யும் போக்கு தற்சமயம் அதிகரித்துவருகிறது.

சிங்கப்பூரிலும் கடந்த ஐந்தாண்டில் அத்தகைய பதிவுகள் 30 விழுக்காடு அதிகரித்துள்ளன.

IPOS Go மூலம் பதிவுக்கு விண்ணப்பிக்கும்போது, அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் பெறவும் செயலி வழிவகுக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்