Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

4.5 மீட்டர் உயரத்துக்கு மேல் பொருள்களை ஏற்றியிருந்த கனரக வாகனம் AYE மேம்பாலச் சாலை மீது மோதியது - ஓட்டுநர் கைது

இன்று காலை சுமார் 7 மணிக்கு ஒரு வாகன விபத்துப் பற்றி காவல்துறையிடம் தகவல் அளிக்கப்பட்டது. 

வாசிப்புநேரம் -

இன்று காலை சுமார் 7 மணிக்கு ஒரு வாகன விபத்துப் பற்றி காவல்துறையிடம் தகவல் அளிக்கப்பட்டது.

4.5 மீட்டர் உயரத்துக்கு மேல் பொருள்களை ஏற்றியிருந்த டிரெய்லர் வாகனம் ஆயர் ராஜா விரைவுச்சாலையிலுள்ள மேம்பாலச் சாலை மீது மோதியதாகக் கூறப்பட்டது.

பொதுக் கட்டமைப்பின் மீது கனரக வாகனத்தை மோதியதற்காக 45 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்த விபத்தில் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட விரும்பவில்லை என்றும்
குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அந்த விபத்தினால் MCE நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் கிளமெண்டி அவென்யூ 2 வெளிவாயில் முதல் ஜூரோங் டவுன் ஹால் வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்த நெரிசல் நீண்ட நேரத்திற்குப் பின் மாலை 6.30 மணிக்கு நீங்கியதாக நிலப் போக்குவரவு ஆணையம் 'செய்தி'யிடம் தகவல் அளித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்