Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செப்டம்பர் இறுதி வரை வடக்கு-தெற்குப் பாதை சேவை நேரங்களில் மாற்றம்

வடக்கு-தெற்குப் பாதையில் புதுப்பிப்புப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நடைபெறுவதால், சில ரயில் நிலையங்கள் தாமதமாகத் திறக்கப்பட்டு, சீக்கிரமே மூடப்படும்.

வாசிப்புநேரம் -

வடக்கு-தெற்குப் பாதையில் புதுப்பிப்புப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நடைபெறுவதால், சில ரயில் நிலையங்கள் தாமதமாகத் திறக்கப்பட்டு, சீக்கிரமே மூடப்படும்.

இந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து, அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை அந்த மாற்றம் நடப்பில் இருக்கும் என SMRT நிறுவனம் இன்று தெரிவித்தது.

இந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து, அடுத்த மாதம் முதல் தேதி வரை, புக்கிட் பாத்தோக்கிற்கும், மார்சிலிங்கிற்கும் இடையில் உள்ள 6 ரயில் நிலையங்கள், வார இறுதி நாள்களில், காலை சுமார் 8 மணிக்குத் திறக்கப்படும்.

அடுத்த மாதம் 6ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை, புக்கிட் பாத்தோக்கிற்கும், இயூ டீக்கும் இடையில் உள்ள 4 ரயில் நிலையங்கள், இரவு 11 மணிக்கு மூடப்படும். குறிப்பிட்ட வெள்ளி, சனிக் கிழமைகளில் அது நடப்பில் இருக்கும்.

அதனால் கிடைக்கும் கூடுதல் நேரம், மின்-விநியோகக் கட்டமைப்பின் புதுப்பிப்புப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட நாள்களில் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே பேருந்துச் சேவை வழங்கப்படும் என்று அது தெரிவித்தது.

பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும்படியும், பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் புறப்படும் நேரத்தைச் சரிபார்த்துக்கொள்ளும்படியும் SMRT ஆலோசனை கூறியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்