Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப் போக்குவரத்துக் கட்டணம் உயர்கிறது

சிங்கப்பூரில், வரும் டிசம்பர் 28ஆம் தேதியிலிருந்து, பெரியவர்களுக்கான பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 9 காசு உயரவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
பொதுப் போக்குவரத்துக் கட்டணம் உயர்கிறது

(படம்: TODAY/Nuria Ling)

சிங்கப்பூரில், வரும் டிசம்பர் 28ஆம் தேதியிலிருந்து, பெரியவர்களுக்கான பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 9 காசு உயரவிருக்கிறது.

பொதுப் போக்குவரத்து மன்றம் இன்று அதனை அறிவித்தது.

மன்றத்தின் வருடாந்தரக் கட்டண மறு ஆய்வுக்குப் பிறகு அந்த அறிவிப்பு வெளியானது.

அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகள்:

ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்துக் கட்டணம் - 7%

மாணவர்கள், மூத்தோர், குறைந்த வருமான ஊழியர்கள், உடற்குறையுள்ளோர்: 4 காசு

ஒருமுறை மட்டும் ரயில் பயணம் செய்பவர்கள்: 20 காசு

பேருந்துப் பயணத்துக்கு ரொக்கமாகச் செலுத்துவோர்: 20 காசு

பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும் பட்டயக் கல்வி மாணவர்களுக்கும் முதன்முறையாக விரிவுப்படுத்தப்படும் பயணச் சலுகை அட்டைத் திட்டம்:

பயனடைவோர் எண்ணிக்கை: சுமார் 80,000
சேமிக்கும் அளவு: 70%
ஒவ்வொரு பயணத்துக்கும் சேமிப்பு: $1.54

குறைந்த வருவாய் ஈட்டும் சிங்கப்பூரர்கள் கட்டண உயர்வைச் சமாளிக்கக் கைகொடுக்கும் நோக்கில், 450,000 குடும்பங்களுக்கு 50 வெள்ளிப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்