Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உச்சநேரத்தில் நடை, சைக்கிள், பொதுப் போக்குவரத்துப் பயணம் அதிகரித்துள்ளது

சிங்கப்பூரில், நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, உச்சநேரத்தில் நடந்து செல்வோர், சைக்கிளில் செல்வோர், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் ஆகியோரின் விகிதம் 2012இலிருந்து 3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -

Walk-Cycle-Ride (WCR) குறித்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் அவ்விவரத்தை வெளியிட்டார்.

Walk-Cycle-Ride (WCR) போக்குவரத்து முறையைப் பயன்படுத்துபவர்கள்:

2012: 69%
2019: 72%
2040க்குள்: 90%

2040க்குள் 90 விழுக்காட்டினர் நடை, சைக்கிள், பொதுப் போக்குவரத்து வழி பயணம் செய்வதை உறுதிப்படுத்த போக்குவரத்து அமைச்சின் திட்டங்கள்:

1. பேருந்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன்வழி பயண நேரத்தைக் குறைப்பது

2. ரயில் கட்டமைப்பை விரிவுபடுத்துவது

3. சைக்கிள் ஓட்டுவதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவது

4. பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் அதிகரிப்பது 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்