Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப் போக்குவரத்து வசதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது: மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில்

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை என்று போக்குவரத்து மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை என்று போக்குவரத்து மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளார்.

பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு தாக்கப்படுவது பற்றிக் குறிப்பிட்ட வேவுத் தகவல் ஏதும் இல்லை. இருப்பினும், பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்கிறது என்றார் அவர்.

பாதுகாப்புப் பற்றிக் கூடுதல் விழிப்புணர்வூட்டவும், அவசரகால ஆயத்த நிலையை வலுப்படுத்தவும் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக டாக்டர் ஜனில் சொன்னார்.

அதிகாரிகளின் பாதுகாப்பு முயற்சிகளுக்கு அப்பால், நிலப்போக்குவரத்து ஆணையம், உள்துறை அமைச்சுடன் இணைந்து பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி காலாண்டுக்கொருமுறை பயிலரங்கு நடத்தி வருவதாக அவர் சொன்னார்.

அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால், பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் தங்களையும், மற்றவர்களையும் பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து பயற்சிகள் வழங்கப்படும் என்றும் டாக்டர் ஜனில் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்