Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர்களை லாரியில் ஏற்றிச்செல்லும் முறையை மாற்றும்படி கோரிக்கைகள்

சிங்கப்பூரில் ஊழியர்களை லாரியில் ஏற்றிச்செல்லும் முறையைப் பரிசீலனை செய்வதற்கான கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் ஊழியர்களை லாரியில் ஏற்றிச்செல்லும் முறையைப் பரிசீலனை செய்வதற்கான கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன.

அண்மையில் நேர்ந்த இரண்டு விபத்துகளில், ஊழியர்கள் பலர் காயமடைந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, தீவு விரைவுச்சாலையில் நேர்ந்த விபத்தில் ஊழியர்கள் இருவர் மாண்டனர்; 15 பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை நேர்ந்த மற்றொரு விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்லும் போக்கு கவனத்துக்கு வந்துள்ளது.

அதன் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஊழியர்களைப் பேருந்துகளிலோ, வேன்களிலோ ஏற்றிச் செல்வதைக் கட்டாயமாக்கும்படி கோரும் மனு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

8,000க்கும் அதிகமானோர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2010-ஆம் ஆண்டு இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. அதனையடுத்து, ஊழியர்கள் பயணம் மேற்கொள்ளும் லாரியின் பகுதியில் மேலும் உயரமான கம்பிகளும், மேற்கட்டும் நிறுவப்படுவது அவசியமாக்கப்பட்டது.

அத்துடன், லாரி ஓட்டுநர்கள் மணிக்கு 60 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் செல்லவேண்டும். ஊழியர்களிடையே போதிய இடைவெளி இருப்பதை உறுதிசெய்வதும் கட்டாயம்.

அண்மை ஆண்டுகளில், லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகள் குறைந்துள்ளன.

2015- 1,413 விபத்துகள்

2019- 1,043 விபத்துகள்

அத்தகைய விபத்துகளில், ஒவ்வோர் ஆண்டும் மாண்டோர் எண்ணிக்கை அதிகபட்சம் 8 ஆக இருந்தது; சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்