Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வருபவர்கள் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் 21 நாள் தங்க வேண்டும்

கிருமித்தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வருபவர்கள் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் 21 நாள் தங்க வேண்டும் 

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வருபவர்கள் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் 21 நாள் தங்க வேண்டும்

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

குறிப்பிட்ட நாடுகளுக்கு 14 நாள்களில் சென்றிருந்தோர் சிங்கப்பூருக்குள் நுழையும்போது சில நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அது இனி 21 நாள்களாக உயர்த்தப்படும்.

அத்துடன் கிருமித்தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருவோர், 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவுக்குப் பதிலாக, 21 நாள்கள் உத்தரவை நிறைவேற்றுவது கட்டாயமாக்கப்படும்.

வரும் சனிக்கிழமை முதல் சிங்கப்பூருக்குள் நுழைவோருக்குப் புதிய விதிமுறை பொருந்தும்.

தற்போது 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவோர், அது வரும் வெள்ளிக்கிழமைக்குள் முடிவுறாத நிலையில் மேலும் 7நாள்களுக்கு அதனை நீட்டிக்கவேண்டும்.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், இந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வருவோர் 21 நாள் உத்தரவைக் குறிப்பிடப்பட்ட வளாகங்களில் தங்கி நிறைவேற்றியாகவேண்டும்.

ஃபிஜி, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு 14 நாள்களில் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்குள் நுழைவோருக்கும் தனிமைப்படுத்திக்கொள்ளும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இனி அது 21 நாள்களுக்கு உயர்த்தப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்