Images
  • hksg
    (படம்: AFP/Anthony WALLACE and AP/Yong Teck Lim)

சிங்கப்பூர் - ஹாங்காங் சிறப்புப் பயணமுறை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும்: அமைச்சர் ஓங்

சிங்கப்பூர் - ஹாங்காங் இடையில் நடப்புக்குவரவிருந்த கட்டுப்படுத்தப்பட்ட சிறப்புப் பயணமுறை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை அடுத்து, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் Facebook-இல் பதிவிட்டார்.

விமானச் சேவைக்கான ஏற்பாட்டைப் பற்றி ஹாங்காங்கின் வர்த்தக பொருளியல் மேம்பாட்டு அமைச்சர் எட்வர்ட் யாவிடம் (Edward Yau) இன்று பேசியதாக அவர் சொன்னார்.

சிறப்புப் பயணமுறை ஏற்பாடு மீண்டும் இரண்டு வாரங்களுக்கு பிறகு பரிசீலிக்கப்படும்.

பயணங்களுக்குத் திட்டமிடுவோரின் வருத்தத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இருப்பினும், பொதுச்சுகாதாரத்தைக் கருத்தில்கொண்டு அதை ஒத்திவைப்பதே சிறந்தது. 

என்று திரு. ஓங் கூறினார்.

இரு நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவை நாளை தொடங்கவிருந்தது.

விமானச் சேவை நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளை தொடர்புகொள்ளும் என்றும் அமைச்சர் ஓங் சொன்னார்.

ஹாங்காங்கில் இன்று புதிதாக 43 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

அவற்றுள் சமூக அளவில், 36 சம்பவங்கள் பதிவாயின. 

Top