Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயணத்துறையை மீண்டும் தொடங்கும் திட்டம் அடுத்த சில மாதங்களில் சாத்தியமாகலாம்: அமைச்சர் கான் கிம் யோங்

வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் பயணத்துறையை மீண்டும்  தொடங்குவதற்கான வருங்காலத் திட்டத்தை அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் பயணத்துறையை மீண்டும் தொடங்குவதற்கான வருங்காலத் திட்டத்தை அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

பயணத்துறை விருது நிகழ்ச்சியில் அவர் அதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விகிதம் அதிகரித்து வருகிறது.

கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்வதற்கும் தொடர்புத் தடங்களைக் கண்டறிவதற்கும் தேவையான ஆற்றல் இருக்கிறது.

குழுவாகச் சேர்ந்து பாதுகாப்பாகப் பயணங்களை மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கான் கூறினார்.

பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கும் வேளையில், அவர்கள் தனித்துவமான அனுபவங்களையும் பெறலாம்.

COVID-19 நோய்ப்பரவலுடன் வாழவும் எல்லைகளைத் திறக்கவும் அதிகமான நாடுகள் தயாராகி வருகின்றன.

சிங்கப்பூரிலும் உலகிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகமாகும்.

இவ்வாண்டு இறுதிக்குள் பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்படலாம்; பயன்மிக்க பாதுகாப்பு அம்சங்களுடன் உலகத்துடன் மீண்டும் இணையலாம் என்று திரு. கான் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்