Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், அனைவரும் பயணம் மேற்கொள்ள இயலாது

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், அனைவரும் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தெரிவித்தார்.

வாசிப்புநேரம் -
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், அனைவரும் பயணம் மேற்கொள்ள இயலாது

படம்: Jeremy Long

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், அனைவரும் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தெரிவித்தார்.

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தயாராக உள்ள குறிப்பிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதிப்பது பற்றி சிங்கப்பூர் பேச்சு நடத்திவருகிறது.

அப்போது நாட்டின் எல்லை மீண்டும் திறக்கப்படும்போது, அத்தியாவசியப் பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

குறிப்பாக, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களின் ஊழியர்கள் வர்த்தகக் காரணங்களுக்காக வட்டார நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இது உதவும் என்று அமைச்சர் கூறினார்.

அது சிங்கப்பூரர்கள் தொடர்ந்து வேலை செய்யவும், பணி காரணமாகப் பயணம் செய்யவும் வகைசெய்யும்.

இக்காலக்கட்டத்தில் எல்லோருக்கும் பயணம் மேற்கொள்ள அனுமதி இருக்காது என்றும் அதற்கு ஏற்பாடுசெய்யக் கூடுதல் காலம் எடுக்கும் என்றும் அமைச்சர் வோங் கூறினார்.

அச்சூழ்நிலை மற்ற நாடுகளுக்கும் பொருந்தும் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்