Images
  • Training

சிங்கப்பூர் ஆகாய, இராணுவ, கடற்படை வீரர்கள் ஆஸ்திரேலியாவில் கூட்டுப் பயிற்சி

சிங்கப்பூரின் ஆகாயப் படை, இராணுவம், கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த 1,300க்கும் அதிகமான வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய இருதரப்புப் பாதுகாப்பு உறவைப் பிரதிபலிக்கும் பயிற்சி அது.

Exercise Trident என்னும் அந்தப் பயிற்சியின் கடைசி அங்கம் நாளை நடைபெறுகிறது.

இந்த சினூக் ரக ஹெலிகாப்டர் வீரர்களைக் கடற்படைக் கப்பலிலிருந்து பயிற்சி இடம்பெறும் நிலப் பகுதிக்கு அழைத்துச் செல்லும்.

வீரர்களை ஆகாயம் வழி அழைத்துச் செல்வதுதான் பயிற்சியில் ஆகாயப் படையினரின் முக்கியப் பங்கு.

இந்தப் பயிற்சியில் ஆகாயப் படை வீரர்கள் இராணுவத்துடனும் கடற்படையினருடனும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

ஹெலிகாப்டரில் விமானிக்குக் கைகொடுக்கும் அதிகாரி ஒருவர் இருப்பார்.

பணிகள் பாதுகாப்பாகவும் திறமையாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்வது அவருடைய பொறுப்பு.

கூட்டுப் பயிற்சியில் சிங்கப்பூர் ஆகாயப் படையின் 10 விமானங்கள் இடம்பெறுகின்றன.

அவற்றோடு கிட்டத்தட்ட 200 வீரர்களும் பங்கேற்கின்றனர்.

Top