Images
  • Trump b#day
    ( படம் : AFP )

இன்று 72ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இன்று தமது 72ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

செவ்வாய்க்கிழமை அன்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை சிங்கப்பூரில் சந்தித்த பிறகு நாடு திரும்பியுள்ளார் அதிபர் டிரம்ப்.

சிங்கப்பூரில் ஏற்கனவே கேக் வெட்டி பிறந்தநாளை முன்கூட்டியே அவர் கொண்டாடினார்.

அமெரிக்க அதிபர் பதவியை ஏற்ற ஆக வயதானவர் என்ற பெருமையும் அவரைச் சேரும். கடந்த ஆண்டு, பதவியேற்றபோது அவரது வயது 70.

அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். 

உங்கள் கருத்து

Top