Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு - என்ன சொன்னார்கள்?

சந்திப்பு தொடங்கியதிலிருந்து இரு தலைவர்களும் முன்வைக்கும் கருத்துகளை அனைவரும் கூர்ந்து கவனித்துவருகின்றனர்.

வாசிப்புநேரம் -
டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு - என்ன சொன்னார்கள்?

(படம்:REUTERS)

சிங்கப்பூரில் உச்சநிலைச் சந்திப்பு நடத்திய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கிம் ஜோங் உன்னும் ஒருவருக்கு ஒருவர் நட்புறவோடு பேசிக்கொண்டனர்.

செந்தோசாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு காலை 9 மணிக்குத் தொடங்கியது.

சந்திப்பு தொடங்கியதிலிருந்து இரு தலைவர்களும் முன்வைக்கும் கருத்துகளை அனைவரும் கூர்ந்து கவனித்துவருகின்றனர்.

தனிப்பட்ட சந்திப்புக்கு முன்னர்...

திரு டிரம்ப் சந்திப்பு குறித்து மகிழ்ச்சியாய் இருப்பதாகச் சொன்னார். சந்திப்பில் கலந்துகொள்வதற்குப் பெருமைப்படுவதாகவும் கூறினார்.

பழைய செயல்முறைகளைக் கடந்து இடையூறுகளைக் களைந்து இன்றைய சந்திப்பில் கலந்துகொள்வதற்குக் கடந்துவந்த வழி சுலபமானதல்ல என்றார் திரு கிம்.

அமெரிக்க-வடகொரிய இருதரப்புச் சந்திப்பின் தொடக்கத்தில்...

வடகொரியத் தலைவரைச் சந்திப்பதில் அதீதப் பெருமை கொள்வதாகத் திரு டிரம்ப் கூறியிருக்கிறார்.

இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அமைதிக்கான முன்னோட்டமாக இந்தச் சந்திப்பைப் பார்ப்பதாகத் திரு கிம் சொன்னார். கடந்தகால தவறுகளைக் கடந்து, பதற்றத்தை நீக்கி இந்நிலையை எட்டியிருப்பதைச் சுட்டினார் திரு கிம்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெரியதொரு புதிய திட்டத்தைத் தொடங்குவதில் உறுதியாய் இருப்பதாகக் கூறினார் அவர்.

பகலுணவுக் கூட்டத்தின் தொடக்கத்தில்...

"நல்ல படம் எடுக்க முடிகிறதா? நாங்கள் பார்க்க அழகாய் நன்றாக இருக்கிறோமா? சிறப்பு! "

என்று செய்தியாளர்களைப் பார்த்து திரு டிரம்ப் சொன்னார்.

திரு. கிம்முடன் நடத்திய சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்தது என்று அதிபர் டிரம்ப் பகலுணவுக் கூட்டத்தின் இறுதியில் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்