Images

சிங்கப்பூரில் டிரம்ப்-கிம் உச்சநிலை சந்திப்பு நடந்து ஓராண்டு நிறைவு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையே மூன்றாவது உச்சநிலைச் சந்திப்பு நடைபெறும் சாத்தியம் இருப்பதாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் கூறியுள்ளார்.

அதுபற்றி இறுதி முடிவெடுக்கும் வாய்ப்பு தற்போது பியோங்யாங்வசம் உள்ளதாக அவர் சொன்னார்.

வட கொரியத் தலைவரிடமிருந்து அழகான கடிதமொன்று கிடைத்திருப்பதாகத் திரு. டிரம்ப் கூறியிருக்கும் வேளையில் இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மூன்றாவது சந்திப்பு எங்கு, எப்போது நடக்கக்கூடும் என்பது தெரியாத நிலையில் அதற்கு வித்திட்ட முதல் இரண்டு சந்திப்புகளில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம் 

Top