Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசிரியர் பணியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடவேண்டாம்: கல்வி அமைச்சு

ஆசிரியர் தொழிலின் நேர்மை, மாணவர்களுடன் ஆசிரியர்களின் அனைத்துத் தொடர்புகளிலும் இருக்கும் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

 (வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஆசிரியர் தொழிலின் நேர்மை, மாணவர்களுடன் ஆசிரியர்களின் அனைத்துத் தொடர்புகளிலும் இருக்கும் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

15 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதற்காக உயர்நிலைப் பள்ளி பெண் ஆசிரியர் ஒருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் இணையத்தில் வெளிவந்துள்ள கருத்துகள் பற்றி CNA கல்வி அமைச்சிடம் கேட்டிருந்தது.

அந்த ஆசிரியருக்கு இப்போது 29 வயது. அவருக்கு ஈராண்டு 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு அந்தச் சிறுவனுடன் அவர் பாலுறவில் ஈடுபட்டிருந்தார்.

அத்தகைய ஆசிரியர் கிடைத்த அந்தச் சிறுவன், அதிர்ஷ்டசாலி எனச் சிலர் இணையத்தில் கருத்து தெரிவித்து கேலி செய்திருந்தனர்.

அத்தகைய கருத்துகளைப் பார்க்கையில், கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படுவதாக, AWARE மகளிர் நல அமைப்பின் நிர்வாக இயக்குநர் கோரினா லிம் (Corinna Lim) கூறினார்.

அதுபோன்ற கருத்துகள் இணையத்தில் வெளியிடப்படுவதால், அத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் உதவி நாடத் தயங்கலாம் என்றார் அவர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்