Images
  • e

TraceTogether சாதனம் அல்லது செயலியை மட்டும் பயன்படுத்தும் SafeEntry வருகைப் பதிவு நடைமுறை வரும் 17ஆம் தேதி முதல் நடப்பிற்கு வரும்

TraceTogether சாதனம் அல்லது செயலியை மட்டும் பயன்படுத்தும் SafeEntry வருகைப் பதிவு நடைமுறை வரும் 17ஆம் தேதி முதல் நடப்பிற்கு வரும் என்று அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்தது.

முன்னதாக அது அடுத்த மாதம் தொடங்கவிருந்தது.

கடைத்தொகுதிகள், வேலையிடங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அந்த நடைமுறை கட்டாயமாகும்.

உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற, மக்கள் அதிக நேரத்திற்கு நெருங்கிய தொடர்பில் இருக்கக்கூடிய வளாகங்களுக்கும் அந்த முறை பொருந்தும்.

மின்னிலக்க ரீதியாகத் தொடர்புத் தடங்களைக் கண்டறிவதை அதன் மூலம் வலுப்படுத்தலாம் என்று குழு தெரிவித்தது.

சமூக அளவில் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்களை மேம்பட்ட முறையில் சமாளிக்கவும் அது உதவும் என்று குறிப்பிடப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை இன்னும் துரிதமாகத் தனிமைப்படுத்தவும் அந்த நடைமுறை ஏதுவாக இருக்கும் என்று குழு தெரிவித்தது.

Top