Images
  • TTSH 90plus
    (படம்:Raj Nadarajan/TODAY)

டான் டொக் செங் மருத்துவமனையின் குறிப்பிட்ட வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளியின் பராமரிப்பாளர்களை அனுமதிக்கப் போவதில்லை - 3 பலதுறை மருந்தகக் குழுமங்கள்

டான் டொக் செங் மருத்துவமனையின் குறிப்பிட்ட வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளியின் பராமரிப்பாளர்களை அனுமதிக்கப் போவதில்லை என்று சிங்கப்பூரில் உள்ள 3 பலதுறை மருந்தகக் குழுமங்கள் தெரிவித்துள்ளன.

டான் டொக் செங் மருத்துவமனைக் குழுமத்துடன் தொடர்புடைய மேலும் 8 பேருக்கு இன்று கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து, அந்த மருத்துவமனையின் தொடர்பில் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 35-க்கு உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரின் இப்போதைய ஆகப் பெரிய கிருமித்தொற்று இடமாக டான் டொக் செங் மருத்துவமனை உருவெடுத்துள்ளது.

சென்ற மாதம் 18 ஆம் தேதியிலிருந்து டான் டொக் செங் வார்டுகளுக்குச் சென்று திரும்பிய அனைவரும், இங்குள்ள 6 பலதுறை மருந்தகங்களுக்குச் செல்லும்போது அதுபற்றித் தெரிவிக்க வேண்டும் என்று தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் கூறியது.

COVID-19 தடுப்பூசி போட வருவோர், அண்மையில் டான் டொக் செங் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால், அவர்கள் தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Top