Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'தமிழில் தட்டிப்பார்' சாதனை முயற்சி - சந்தேகங்களுக்கான விடைகள்

'த'தமிழில் தட்டிப்பார்' சாதனை முயற்சி - சந்தேகங்களுக்கான விடைகள்மிழில் தட்டிப்பார்' சாதனை முயற்சி - சந்தேகங்களுக்கான விடைகள்

வாசிப்புநேரம் -

என்னென்ன விவரங்களை அனுப்பவேண்டும்?

உங்கள் பெயர்:
பிறந்த தேதி:
சிங்கப்பூரர் / நிரந்தரவாசி

தமிழ்த் தட்டச்சை Android /iPhone கைத்தொலைபேசிகளில் எப்படிப் பதிவிறக்கம் செய்வது?

கைத்தொலைபேசியில் Settings பக்கத்துக்குச் செல்லவும்.
அதில் Keyboard என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் English என்பது தெரிவுசெய்யப்பட்டிருக்கும். அத்துடன் 'Tamil' என்பதையும் தெரிவுசெய்யவும்.
தகவல் அனுப்பும் பக்கத்தில் விசைப்பலகையில் (Keyboard) தமிழையும் ஆங்கிலத்தையும் தேவைக்கேற்ப மாற்றித் தட்டச்சு செய்ய முடிகிறதா என்பதைப் பாருங்கள்.

ஒருவேளை உங்களால் மேற்கூறியவாறு செய்ய முடியவில்லை என்றால், நிகழ்ச்சியன்று தமிழ் விசைப்பலகையைக் கைத்தொலைபேசியில் இயக்க (activate) எங்கள் ஊழியர்கள் உதவுவர்.

நிகழ்ச்சிக்கு என்னென்ன கொண்டுவரவேண்டும்?

தகவல் அனுப்பும் வசதி கொண்ட ஏதேனும் ஒரு கைத்தொலைபேசி மட்டும் கொண்டுவந்தால் போதுமானது.

நிகழ்ச்சியில் வேறு என்னென்ன அம்சங்கள் உள்ளன?

நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுகள், போட்டிகள், புதிர்கள் ஆகியவை இடம்பெறும். குழுவாக நிழற்படம் எடுத்துக்கொள்ளலாம். மேலும் உணவு, பானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வயதுவரம்பு உண்டா?

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எந்த வயது வரம்பும் கிடையாது.

நிகழ்ச்சி பற்றிய மேல்விவரங்கள் எப்போது தெரிவிக்கப்படும்?

நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்கள் செப்டம்பர் 15ஆம் தேதிவாக்கில் WhatsApp வழி அனுப்பிவைக்கப்படும். மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

கூட்டாக இணைந்து தட்டச்சு செய்யும் சாதனை எப்படிப் படைக்கப்படும் ?

நிகழ்ச்சியில் ஒருசில வரிகள் திரையில் காட்டப்படும். அதை அனுப்பவேண்டிய தொலைபேசி எண்ணும் கொடுக்கப்படும். வரிகளைத் தமிழில் தட்டச்சு செய்து திரையில் காட்டப்படும் எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நிகழ்ச்சியின் இறுதியில் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

சிங்கப்பூர் பலதுறைத் தொழில்நுட்பக் கழக வளாகத்திற்கு வரவேண்டுமா வீட்டிலிருந்து சாதனை படைக்க முடியுமா?

நீங்கள் வளாகத்திற்கு வரவேண்டும். பலர் ஒன்றுகூடி ஒரே இடத்திலிருந்து தமிழில் தட்டச்சு செய்வதுதான் சாதனை.

கூட்டாகச் செய்யும் சாதனையைப் படைக்க எவ்வளவு நேரத்துக்குள் வரிகளைத் தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்?

எல்லா வயதினரும் கலந்துகொள்கின்றனர் என்பதால், அதற்குப் போதுமான நேரம் வழங்கப்படும்.

கூட்டாகச் செய்யும் சாதனைக்கு வரிகளில் தவறுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

தமிழில் தட்டச்சு செய்வதை ஊக்குவிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். அதனால் கூட்டாகத் தமிழ்த் தட்டச்சு செய்யும் சாதனையில் ஒருசில தவறுகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

மிகவும் மெதுவாகத் தமிழில் தட்டச்சு செய்வோரும் கூட்டாகச் செய்யும் சாதனையில் பங்கெடுக்க முடியுமா?

நிச்சயமாக முடியும். தமிழில் தட்டச்சு செய்வதை ஊக்குவிப்பதே சாதனையின் நோக்கம். வேகம் அதற்குத் தடையல்ல.

இதுவரை தமிழில் தட்டச்சு செய்யாதவர்கள் நிகழ்ச்சியில் பங்கெடுக்க என்ன செய்யவேண்டும்?

தமிழ் விசைப்பலகையை (Keyboard) கைத்தொலைபேசியில் முடுக்கிவிடவும். நீங்கள் நிகழ்ச்சியில் முயன்று பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அது தமிழாக மாறும் முறையை நான் பயன்படுத்தலாமா?

நீங்கள் எந்த உள்ளீட்டு (Input) முறையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எங்களுக்கு வந்துசேரும் வரிகள் தமிழில் இருக்கவேண்டும்.

நான் தமிழில் தட்டச்சு செய்ய வேறொரு மென்பொருளைப் பயன்படுத்துகிறேன். அது ஏற்றுக்கொள்ளப்படுமா?

ஏற்றுக்கொள்ளப்படும். நீங்கள் எந்த உள்ளீட்டு (Input) முறையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எங்களுக்கு வந்துசேரும் வரிகள் தமிழில் இருக்கவேண்டும்.

எவ்வளவு பெரிய பத்தியை / வரிகளை நான் தமிழில் தட்டச்சு செய்யவேண்டியிருக்கும்?

அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வரிகளைத் தட்டச்சு செய்யவேண்டியிருக்கும்.

நான் Wifi பயன்படுத்தி பத்தியை அனுப்பமுடியுமா?

Wifi வசதி கிடையாது. கைத்தொலைபேசியில் உங்கள் சொந்தத் தகவல் திட்டத்தை நீங்கள் பயன்படுத்தவேண்டும்.

ஆக வேகமாகத் தட்டச்சு செய்பவர் என்ற சாதனை எப்படிப் படைக்கப்படும்?

நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு சில வரிகள் கொடுக்கப்படும். அது நேரத்தைப் பொறுத்து கணக்கிடப்படும். மேல்விவரங்கள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.


மேலும் சந்தேகங்கள் இருந்தால் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பிவையுங்கள்.
TamilDigi [at] mediacorp.com.sg 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்