Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழில் தட்டிப்பார்...பரிசுகளை வென்றுபார்

வரும் செப்டம்பர் 22ஆம் தேதி சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் (Singapore Polytechnic) 'தமிழில் தட்டிப்பார்' செய்தியின் சாதனை முயற்சி நடைபெறவுள்ளது. 

வாசிப்புநேரம் -


வரும் செப்டம்பர் 22ஆம் தேதி சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் (Singapore Polytechnic) 'தமிழில் தட்டிப்பார்' செய்தியின் சாதனை முயற்சி நடைபெறவுள்ளது. 

முதன்முறையாக 'செய்தி' இரு சாதனைகளை ஒரே நிகழ்வில் படைக்கவுள்ளது. அதற்கு நேயர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்துவருகின்றனர். அதற்காகப் பரிசுகளை நாங்கள் தயார் செய்துள்ளோம்.

ஆக வேகமாகத் தட்டச்சு செய்யும் மூன்று நபர்களுக்கு விமானச் சீட்டுகள் பரிசாக வழங்கப்படும்.

முதல் பரிசு
மெல்பர்ன் (Melbourne) சென்று வர 2 Emirates விமானச் சீட்டுகள்

இரண்டாம் பரிசு

பாலித் தீவு (Bali Island) சென்று வர 2 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சீட்டுகள்

மூன்றாம் பரிசு

புக்கெட் (Phuket) சென்று வர 2 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சீட்டுகள்

அதுதவிர நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து பல பரிசுகளை வெல்லலாம்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் "சாதனையாளர்" என்று குறிப்பிடப்பட்ட டீ-சட்டை வழங்கப்படும். சாதனையில் கலந்துகொண்டதற்கு அடையாளமாக Singapore Book of Records-இன் முத்திரையுடன் சான்றிதழும் வழங்கப்படும்.  உணவு, கேளிக்கைக் கூடங்களும் உண்டு!

இப்போதே பதிவு செய்யுங்கள்!

பதிவு செய்ய: 8359 6219 என்ற எண்ணுக்கு WhatsApp மூலம் கீழ்க்கண்ட விவரங்களை அனுப்பி வையுங்கள்.

பெயர்:
பிறந்த தேதி:
சிங்கப்பூரர் / நிரந்தரவாசி:

திரளாக வாருங்கள்! திறனைக் காட்டுங்கள்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்