Images
  • ttp logo

செய்தியின் 'தமிழில் தட்டிப்பார்' சாதனை முயற்சி - பங்கெடுப்போருக்கு எந்த மாதிரி வாக்கியம் கொடுக்கப்படும்?

தமிழில் தட்டிப்பார், 'செய்தி'யின் சாதனை முயற்சி வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

முதன்முறையாக நடத்தப்படும் இந்தச் சாதனை முயற்சிக்குப் பதிவு செய்தவர்கள் மும்முரமாகத் தயார் செய்துவருவதாகத் தெரிவித்தனர்.


தட்டச்சு சாதனையில் என்ன வகையான வாக்கியங்கள் கொடுக்கப்படும் என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கலாம்.

இதோ சில மாதிரி வாக்கியங்கள்:

"விளையாட்டு உடலை உறுதிசெய்ய உதவும். மனத்துக்கும் மகிழ்ச்சி தரும். கூடி விளையாடும்போது குழு உணர்வு அதிகரிக்கும்." 

குழுவாகச் செய்யும் சாதனை முயற்சியில், இது போன்ற எளிமையான வாக்கியங்களை மட்டுமே தட்டச்சு செய்யவேண்டும்.

இனி என்ன? தயக்கம் இல்லாமல் சாதனை முயற்சிக்குப் பதிவு செய்யுங்கள்!

இடம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி (Singapore Polytechnic Convention Hall)
நாள்: 22 செப்டம்பர் 2019
நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை
வயது வரம்பு: இல்லை
தேவை: கைத்தொலைபேசி மட்டுமே!


பதிவு செய்ய: 8359 6219 என்ற எண்ணுக்கு WhatsApp மூலம் கீழ்க்கண்ட விவரங்களை இப்போதே அனுப்பி வையுங்கள்!

பெயர்:
பிறந்த தேதி:
சிங்கப்பூரர் / நிரந்தரவாசி:

திரளாக வாருங்கள்! திறனைக் காட்டுங்கள்!  


Top