Images
  • Tan Tock Seng Hospital
    (படம்: Calvin Oh)

நேற்று புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர், Tan Tock Seng மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள்

சிங்கப்பூரில் நேற்று புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர், Tan Tock Seng மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அவர்களில் ஐவர் 9D Wardஐச் சேர்ந்த நோயாளிகள்.

சிங்கப்பூரர்களான அவர்கள் அனைவரும் 53 இலிருந்து 94 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த மாதம் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்த 28ஆம் தேதி அவர்கள் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.

மருத்துவமனையில் பணிபுரியும் மூவருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அவர்களில் ஒருவர், 22 வயது மலேசிய மாது.
UEMS Solutions நிறுவனத்தைச் சேர்ந்த அவர், மருத்துவமனையில் பொருள்களைத் தூக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மற்றொருவர், 25 வயது சிங்கப்பூரர்.
அவர் Tan Tock Seng மருத்துவமனையின் அவசரநிலைப் பிரிவின் தாதி.

எஞ்சிய ஒருவர், Ward 9Dஇல் பணிபுரியும் வியாட்நாமைச் சேர்ந்த 26 வயது தாதி.

கடந்த மாதம் 27ஆம் தேதி தாதி ஒருவருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையுடன் தொடர்புடைய 35 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

Top