Images
  • ttsh ambulance
    (படம்: Calvin Oh)

டான் டொக் செங் மருத்துவமனைக்கு மருத்துவர்கள், தாதியர் ஆகியோரை அனுப்பும் சில மருத்துவமனைகள்

சிங்கப்பூரில் உள்ள சில மருத்துவமனைகள், மருத்துவர்கள், தாதியர், பங்காளித்துவ மருத்துவ நிபுணர்கள் ஆகியோரை டான் டொக் செங் மருத்துவமனைக்கு (Tan Tock Seng Hospital) அனுப்பிவருகின்றன.

சமூகத்திலும் டான் டொக் செங் மருத்துவமனையிலும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, மருத்துவச் சேவைக்கான தேவையைச் சமாளிக்க, பொது, தனியார் மருத்துவமனைகளுடன் சுகாதார அமைச்சு கூட்டாகப் பணியாற்றி வருகிறது.

கிருமி மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த டான் டொக் செங் மருத்துவமனை கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகளைப் புதிதாக அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அந்த மருத்துமனை மீதான பளுவைக் குறைக்க, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்பு அவசர மருத்துவ வாகனங்களும் நோயாளிகளை மற்ற பொது, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றன.

தற்போதைய சூழல் நிலைப்படும் வரை, செயலி வழி மருத்துவச் சேவை வழங்குவதற்கோ, மாற்று பராமரிப்பு ஏற்பாடுகளை அமைக்கவோ முனையுமாறு இங்குள்ள மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சு ஆலோசனை விடுத்துள்ளது.

Top