Images
  • tuas

துவாஸ் தொழிற்சாலை வெடிப்பின் எதிரொலி: வேலையிடப் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்துப் பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு

துவாஸ் தொழிற்சாலை வெடிப்புச் சம்பவத்தை ஆராயும் விசாரணைக்குழு,
வேலையிடப் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்துப் பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

துவாஸ் தொழிற்சாலையில் நேர்ந்த வெடிப்புச் சம்பவம் போல் இன்னொரு சம்பவம் நிகழாமல் இருக்க அந்தப் பரிந்துரைகள் உதவலாம் என்று விசாரணைக்குழு கூறியது.

வெடிப்புச் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி விசாரணை தொடங்கியது.

அதைத்தொடர்ந்து இப்போது பொதுமக்களிடம் பரிந்துரைகள் கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இரண்டு விதமான பரிந்துரைகளை முன்வைக்கலாம்.

முதலாவது, தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்குவது, பராமரிப்பது, பழுதுபார்ப்பது முதலியவற்றில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடைமுறைகள்.

இரண்டாவது தொழிற்சாலைகளில் தீப்பற்றிக்கொள்ளக் கூடிய துகள்களைக் கையாள்வது, சேமித்துவைப்பது, விநியோகிப்பது முதலியவற்றில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடைமுறைகள்.

பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இறுதி நாள் இந்த மாதம் 31ஆம் தேதி.

பரிந்துரைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:

Audrina_chua@mom.gov.sg
Delvinder_singh@mom.gov.sg
 

Top