Images
  • Tuas ICA
    (படம்: ICA) 

துவாஸ் சோதனைச் சாவடியில் பட்டாசுகள் பறிமுதல்


சிங்கப்பூர்: கடந்த 4 நாட்களில் சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்குள் பட்டாசுகளைக் கொண்டுவரும் 2 முயற்சிகளைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தடுத்துள்ளது.

அந்தப் பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையம் இன்று(பிப்ரவரி 13) அதன் Facebook பக்கத்தில் தெரிவித்தது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றின் சரக்குப் பகுதியில் 39 பட்டாசுகள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் தொடர்பில் 37 வயது ஆடவர் ஒருவர் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த சனிக்கிழமை மற்றுமொரு சிங்கப்பூர்க் காரில் 5 பெட்டிகளில் pop pop பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆபத்தான வாணவேடிக்கைச் சட்டத்தின் கீழ் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளதை ஆணயம் வலியுறுத்தியது.
 

Top