Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Tuaspring தண்ணீர்ச் சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடுகளை முடக்க பொதுப் பயனீட்டுக் கழகம் உத்தரவு

துவாஸ்பிரிங் (Tuaspring) தண்ணீர்ச் சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடுகளை முடக்குவதற்குப் பொதுப் பயனீட்டுக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாசிப்புநேரம் -
Tuaspring தண்ணீர்ச் சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடுகளை முடக்க பொதுப் பயனீட்டுக் கழகம் உத்தரவு

(படம்: CNA)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

துவாஸ்பிரிங் (Tuaspring) தண்ணீர்ச் சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடுகளை முடக்குவதற்குப் பொதுப் பயனீட்டுக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த ஆலையை அடுத்த 30 நாள்களில் பொதுப் பயனீட்டுக் கழகம் மீட்டுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தண்ணீர் விற்பனை ஒப்பந்தம் தொடர்பான குறைபாடுகளைச் சரிசெய்ய, துவாஸ்பிரிங் ஆலைக்கு, இம்மாதம் 30ஆம் தேதிவரை, பொதுப் பயனீட்டுக் கழகம் காலஅவகாசம் வழங்கியிருந்தது.

2011ஆம் ஆண்டு பொதுப் பயனீட்டுக் கழகத்துடன் ஹய்ஃப்லுக்ஸ் (Hyflux) நிறுவனத்தின் துணை நிறுவனமான துவாஸ்பிரிங், தண்ணீர் விற்பனை ஒப்பந்தம் செய்துகொண்டது.

அதன்படி, 2013ஆம் ஆண்டு முதல், 2038-ஆம் ஆண்டு வரை, அந்த நிறுவனம், நாளுக்கு 70மில்லியன் கேலன் வரை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பொதுப் பயனீட்டுக் கழகத்துக்கு வழங்கவேண்டும்.

இருப்பினும், ஆலையின் செயல்பாடுகள் நம்பகத்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய துவாஸ்பிரிங் தவறிவிட்டதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் கடந்த மாதம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்