Images
  • Tuition teacher (1)
    (படம்: AFP)

'O' நிலைத் தேர்வு மோசடியில் ஈடுபட்ட துணைப்பாட ஆசிரியர்

சிங்கப்பூர்: GCE சாதாரண நிலைத் தேர்வில் 6 சீன நாட்டு மாணவர்கள் மோசடியில் ஈடுபட உதவியுள்ளார் துணைப்பாட ஆசிரியர் ஒருவர்.

அந்த 32-வயது ஆசிரியர் மற்ற மூவருடன் கூட்டுச் சேர்ந்து சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகத்தை ஏமாற்ற முயன்றதாகச் சுமத்தப்பட்டிருந்த 26 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

Zeus கல்வி நிலையத்தைச் சேர்ந்த தலைமையாசிரியரும் 3 ஆசிரியர்களும் ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய தேர்வுத் தாள்களில் மோசடி செய்தனர். சம்பவம் 2016இல் நடந்தது.

பள்ளிச் சீருடையினுள் Bluetooth கருவிகளைப் பொருத்தி, காதுகளில் செவிப்பொறிகளை அணிந்து தேர்வு எழுதச் சென்றனர் 6 மாணவர்கள்.

மாணவர்கள் கைபேசி வழியாகக் கேள்விகளைப் படிக்க நிலையத்தில் உள்ளவர்கள் அதற்கு விடை கண்டு மாணவர்களிடம் கூறுவர்.

தேர்வு ஒன்றின் போது விசித்திரமான ஒலிகள் வருவதைக் கேட்ட தேர்வுக் கூடக் கண்காணிப்பாளர் மாணவரின் மோசடியைக் கண்டுபிடித்தார்.

ஒவ்வொரு மாணவரும் தேர்வில் தேர்ச்சியடைய சுமார் $9000த்தை தலைமையாசிரியர் வாங்கியதாக நம்பப்படுகிறது.

தலைமையாசிரியரின் வழக்கு நாளை (எப்ரல் 17) விசாரிக்கப்படும்.


 

உங்கள் கருத்து

Top