Images
  • Tuition
    (படம்: CNA) 

அதிகமான துணைப்பாட வகுப்புகள் மாணவர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடும்: கல்வி அமைச்சர் ஓங்


கல்வியில் அடிப்படைக் கூறுகளைப் புரிந்துகொண்டு தேர்ச்சி பெறும் மாணவர்களை, அதிகமான துணைப்பாட வகுப்புகளுக்கு அனுப்பினால், அது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடும் என்று கல்வி அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

தனியார் துணைப்பாட வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் செலவிடும் தொகை பற்றி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஓங் எழுத்துபூர்வ பதிலளித்தார்.

சென்ற ஆண்டு சிங்கப்பூரில் துணைப்பாட வகுப்புகளுக்குச் செலவிடப்பட்ட தொகை சுமார் 1.4 பில்லியன் வெள்ளி என்று கூறப்படுகிறது.

பாடங்களில் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு உதவிபெற சில மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகள் தேவை. ஆனால் துணைப்பாட வகுப்புகளை அதிகம் சார்ந்திருப்பதால் தாமாகவே படிக்கும் ஆற்றல் பாதிக்கப்படும் என்று திரு. ஓங் கூறினார்.

சுயமாக நேரத்தை வகுத்துக்கொள்வது போன்ற ஆற்றல்களையும் மாணவர்கள் தெரிந்துகொள்ளத் தவறிவிடுவார்கள் என்றார் அவர்.

துணைப்பாட வகுப்புகளை அதிகமாக வலியுறுத்துவதால் மதிப்பெண்களைக் கொண்டு மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்ற மனப்போக்கு சமுதாயத்தில் பரவும் என்றும் அவர் கூறினார்.

கல்வியில் மட்டுமில்லாமல் மாணவர்கள் அனைத்து விதங்களிலும் தங்களை மேம்படுத்திக்கொள்வதுதான் கல்வித்திட்டத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Top