Images
  • supreme court
    (படம்: CNA)

ஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்

ஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீதான விசாரணை இன்று தொடங்கியது.

23 வயது மகளுடன் மது அருந்திவிட்டு, அதிகாலை நேரத்தில் அவர் தாக்கியதாக நம்பப்படுகிறது.

மகளின் கழுத்தை நெறித்ததுடன், கத்தியால் மிரட்டியதாக நம்பப்படுகிறது.

பெண்ணின் பெற்றோர் மணமுறிவுக்குப்பின் ஒரே வீட்டில் தங்கிவந்தனர்.

சம்பவம் நடந்தபோது பெண்ணின் தாய் அவரது மகன் வீட்டில் தங்கச் சென்றதாகக் கூறப்பட்டது.

விசாரணை நாளை தொடரும்.

பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
 

Top