Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

படங்கள்: Facebook / ROADS.sg

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் நேற்று முன்தினம்(ஜூலை 29) ஏற்பட்ட விபத்தில் ஒரு வேனும் காரும் சம்பந்தப்பட்டிருந்தன.

வேன் ஓட்டுநரும் அவரது பயணிகளும் சுயநினைவோடு கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்குள்ளான கார் சம்பவம் ஏற்படும் முன்னர் மற்றொரு காருக்குப் பக்கத்தில் ஆபத்தான முறையில் சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று அந்த இரண்டு கார் ஓட்டுநர்களும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓட்டுநர்களின் உரிமமும் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 12 மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்