Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"ஊபர்ஃபிளாஷ்", "ஜஸ்ட் கிராப்" - எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?

ஊபரின் புதிய சேவையான ஊபர்ஃபிளாஷ் (UberFLASH) இன்று நடப்புக்குவந்தது.

வாசிப்புநேரம் -

ஊபரின் புதிய சேவையான ஊபர்ஃபிளாஷ் (UberFLASH) இன்று நடப்புக்கு வந்தது.

ஊபர் X (UberX) கட்டணத்தைவிட ஊபர் ஃபிளாஷ் கட்டணம், ஐந்திலிருந்து பத்து விழுக்காடு வரை குறைவாக இருக்கும் என்று ஊபர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஊபர்ஃபிளாஷ் கட்டணத்தை கிராப் (Grab) நிறுவனத்தின் "ஜஸ்ட் கிராப்புடன்" (JustGrab) ஒப்பிடும் சோதனையில் இறங்கினோம் நாங்கள்.

அதில் கட்டணம் சில நேரம் குறைவாகவும், சில நேரம் கூடுதலாகவும் இருந்தது. இருப்பினும், இரண்டிலும் பெரும் வித்தியாசம் ஏதும் இல்லை.

உச்ச நேரத்தின்போது பயணிகள் வழக்கமான கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை எதிர்பார்க்கலாம் என்று ஊபர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதன்படியே, மாலை 6 மணி அளவில் ஊபர்ஃபிளாஷின் கட்டணம் மலை ஏறியது.

ஊபர் ஓட்டுநர்களுடன் உரையாடியதில், சிலர் இந்த முயற்சியால் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருமானமும் உயரும் என்றுகூறி இதை வரவேற்றனர்.

ஆனால் சில ஓட்டுநர்களோ, குறைந்த கட்டணத்திற்கு ஆசைப்படும் பயணிகள், ஊபர் X-ஐத் தெரிவு செய்யாமல் ஊபர் ஃபிளாஷைத் தெரிவு செய்யக்கூடுமென்று குறிப்பிட்டனர்.

ஆகவே, ஊபர் ஃபிளாஷுக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது
போகப்போகத்தான் தெரியும்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்