Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

UBS வங்கிக்கு 10 ஆண்டுகளுக்கு இயற்கை எரிசக்தியை வழங்கவிருக்கும் Sembcorp

Sembcorp நிறுவனம் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் UBS வங்கிக்கு இயற்கை எரிசக்தியை விநியோகிக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
UBS வங்கிக்கு 10 ஆண்டுகளுக்கு இயற்கை எரிசக்தியை வழங்கவிருக்கும் Sembcorp

(படம்: Reuters)

Sembcorp நிறுவனம் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் UBS வங்கிக்கு இயற்கை எரிசக்தியை விநியோகிக்கவிருக்கிறது.

அந்த எரிசக்தி அடுத்த 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

Sembcorp நிறுவனம் நிதித் துறையில் உள்ள நிறுவனத்துடன் பங்காளித்துவ உடன்பாடு செய்துகொள்வது இதுவே முதல் முறை.

சிங்கப்பூரில் UBS வங்கி ஆண்டுதோறும் பயன்படுத்தும் எரிசக்தியில், 25 விழுக்காட்டை Sembcorp வழங்கும்.

இதன் மூலம், அடுத்த பத்தாண்டில் கிட்டத்தட்ட 20,000 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்க இயலும்.

வங்கிக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 15,000 சூரிய சக்தித் தகடுகளை இவ்வாண்டு இறுதிக்குள் நிறுவ Sembcorp திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் தனது பணிகள் அனைத்தும் இயற்கை எரிசக்தியில் இயங்கும் என்று UBS வங்கி தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்