Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முன்னாள் உலு பாண்டான் ராணுவ முகாமின் ஒரு பகுதி விளையாட்டுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது

முன்னாள் உலு பாண்டான் (Ulu Pandan) ராணுவ முகாமின் ஒரு பகுதி, விளையாட்டுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று Sport Singapore (SportSG) அமைப்பும் சிங்கப்பூர் நில ஆணையமும் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
முன்னாள் உலு பாண்டான் ராணுவ முகாமின் ஒரு பகுதி விளையாட்டுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது

(படம்: Singapore Land Authority and Sport Singapore)

முன்னாள் உலு பாண்டான் (Ulu Pandan) ராணுவ முகாமின் ஒரு பகுதி, விளையாட்டுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று Sport Singapore (SportSG) அமைப்பும் சிங்கப்பூர் நில ஆணையமும் தெரிவித்துள்ளன.

அதற்கான கூட்டுக் குத்தகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அவை இன்று அறிவித்தன.

இரு அமைப்புகளுக்கும் இடையில் அத்தகைய ஒத்துழைப்பு இடம்பெறுவது இது முதல்முறை.

விளையாட்டு வசதிகள் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, SportSG அமைப்பு, குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே, புதிய, தரமான, கட்டுப்படியான விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தித் தர முயல்வதாக அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

அதற்கான வரவேற்பையும் கூடுதலான அரசாங்க இடங்களை விளையாட்டுப் பயன்பாட்டுக்கு மாற்றுவது குறித்தும் மதிப்பிட இந்தக் கூட்டுக் குத்தகை வகைசெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.

102 உலு பாண்டான் ரோட்டில் அமைந்துள்ள முன்னைய உலு பாண்டான் ராணுவ முகாமின் அந்தப் பகுதி, 44,000 சதுர மீட்டருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்