Images
  • art tests
    (கோப்புப் படம்: REUTERS)

SG Diagnostics உற்பத்தி செய்த ART பரிசோதனைக் கருவிகள் சட்டவிரோதமாக விநியோகம் செய்யப்பட்டது பற்றி விசாரணை

SG Diagnostics நிறுவனம் உற்பத்தி செய்த ART கிருமித்தொற்றுப் பரிசோதனைக் கருவிகள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டது பற்றிச் சுகாதார அறிவியல் ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது.

அவற்றின் சட்டவிரோத விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

SG Diagnostics நிறுவனத்தின் பரிசோதனைக் கருவிகளை, பயிற்சி பெற்ற சுகாதாரத்துறை நிபுணர்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

பயிற்சி பெறாதவர்கள் அவற்றைப் பயன்படுத்தினால், தவறான கிருமித்தொற்று முடிவுகள் பெறப்படலாம். அதனால், சிகிச்சை பெறுவதற்குத் தாமதமாகலாம் என்று ஆணையம் எச்சரித்தது.

சுய பரிசோதனைக்கென அங்கீகரிக்கப்பட்ட கருவிகளை மட்டுமே பயன்படுத்துமாறு அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. 

Top