Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அனுமதியற்ற வர்த்தகத்தில் ஈடுபட்ட முன்னாள் வர்த்தகப் பிரதிநிதிகள் மூவருக்குச் சிறைத் தண்டனை

சிங்கப்பூரில், அனுமதியற்ற  வர்த்தகத்தில் ஈடுபட்ட முன்னாள் வர்த்தகப் பிரதிநிதிகள் மூவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அனுமதியற்ற வர்த்தகத்தில் ஈடுபட்ட முன்னாள் வர்த்தகப் பிரதிநிதிகள் மூவருக்குச் சிறைத் தண்டனை

படம்: Jeremy Long

சிங்கப்பூரில், அனுமதியற்ற வர்த்தகத்தில் ஈடுபட்ட முன்னாள் வர்த்தகப் பிரதிநிதிகள் மூவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2013 செப்டம்பருக்கும் அக்டோபருக்கும் இடையே அந்த வர்த்தகப் பரிவர்த்தனை நடந்தது.

கோ ஹான்ஷி ஜஸ்டின் (Goh Hanshi Justin) எனும் ஆடவரின் யோசனைக்கு ஏற்ப, டேவிட் லுமன் ஜேம்ஸ் (David Luman James ) என்பவர் தம்முடைய வாடிக்கையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு சொந்தமான 6 கணக்குகளின் மூலம் Skyone பங்குகளை வாங்கினார்.

உரியவர்களின் அனுமதியின்றி டேவிட் அவ்வாறு செய்தார்.

அதே போன்று, வோங் லெங்ஃபெங் (Wong Leng Pheng) என்பவர், 5 கணக்குகளையும், டான் சை கொக் (Tan Chye Kok) என்பவர் 4 கணக்குகளையும் பயன்படுத்தி Skyone பங்குகளை விற்பனை செய்தனர்.

டான், பங்குகளை வாங்கவும் செய்திருக்கிறார்.

கணக்கின் உரிமையாளர்கள் ஒருவரிடம் அவர் அனுமதி பெறவில்லை.

மூவரும், தங்கள் நிறுவனத்தின் அனுமதியைப் பெறத் தவறியதாகக் காவல்துறை கூறியது.

டேவிட்டுக்கு, மூன்றரை மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வோங்கிற்கும் டானுக்கும் மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கோ மீதான வழக்கு தொடர்கிறது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்