Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோட்டார்சைக்கிள் பயணியின் மரணத்துக்குக் காரணமானதை ஒப்புக்கொண்ட பதின்ம வயது ஓட்டுநர்

வாகனம் ஓட்டுவதற்குச் சட்டரீதியாக குறைந்த வயதுடைய நபர், காரைச் செலுத்தி, மோட்டார் சைக்கிள் மீது மோதி அதில் பயணம் செய்தவரைக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
மோட்டார்சைக்கிள் பயணியின் மரணத்துக்குக் காரணமானதை ஒப்புக்கொண்ட பதின்ம வயது ஓட்டுநர்

(படம்:Facebook/Roads.Sg)

வாகனம் ஓட்டுவதற்குச் சட்டரீதியாக குறைந்த வயதுடைய நபர், காரைச் செலுத்தி, மோட்டார் சைக்கிள் மீது மோதி அதில் பயணம் செய்தவரைக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு சம்பவம் நிகழ்ந்தபோது ஒங் ஹான் யூ எனப் பெயரிய அந்த நபருக்கு 17 வயது.

மற்றொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, காரைத் தனது நண்பர்மூலம் வாடகைக்கு எடுத்திருந்தார்.

தனது 15 வயது காதலியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல, ஒங் காரைச் செலுத்தினார்.

காரின் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதினார்.

பின்னர் வாடகைக்குப் பெற்றுக்கொண்ட காரைக் கைவிட்டு, சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றார்.

மோட்டார் சைக்கிளில் ஓட்டுநருடன் பயணம் செய்த 45 வயது நபர், மருத்துமனையில் மாண்டார்.
ஓங்கிற்கு அடுத்த வாரம் தண்டனை விதிக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்