Images
  • Lawrence Wong
    இரண்டாம் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங். படம்: Channel NewsAsia 

அதிவிரைவு ரயில் திட்டமும் பொருள், சேவை வரி உயர்வும் வெவ்வேறு விவகாரங்கள்: லாரன்ஸ் வோங்

அதிவிரைவு ரயில் திட்டமும் பொருள், சேவை வரி நாளடைவில் உயர்த்தப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பும் இரண்டு வெவ்வேறு விவகாரங்கள் என்று இரண்டாம் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (ஜூலை 9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்டுள்ள பொருள், சேவை வரி உயர்வு பெரிய அளவிலான முதலீடுகளுக்கு நிதி வழங்குவதற்கு அல்ல என்றார் அவர். பெரிய அளவிலான முதலீடுகளுக்கு அரசாங்கம் முன்கூட்டியே நிதியை ஒதுக்கும். சாங்கி விமான நிலைய மேம்பாட்டு நிதி, ரயில் உள்கட்டமைப்பு நிதி ஆகியவற்றை அவர் உதாரணங்களாகக் குறிப்பிட்டார். 

ஆணை பெற்ற கழகங்கள், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் ஆகியவை கடன் பெறுவதன் மூலமும் அரசாங்கம் அது போன்ற முதலீடுகளுக்கு நிதியளிக்கக்கூடும். 


Top