Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொடர்ந்து 4ஆவது மாதமாகக் குறைந்துள்ள வேலையின்மை விகிதம்

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம், தொடர்ந்து 4ஆவது மாதமாக பிப்ரவரியில் குறைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
தொடர்ந்து 4ஆவது மாதமாகக் குறைந்துள்ள வேலையின்மை விகிதம்

கோப்புப் படம்: நித்திஷ் செந்தூர்

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம், தொடர்ந்து 4ஆவது மாதமாக பிப்ரவரியில் குறைந்துள்ளது.

மாதாந்திர வேலையின்மை நிலவர அறிக்கையை இன்று மனிதவள அமைச்சு வெளியிட்டது.

பிப்ரவரியில் வேலையின்மை விகிதம் 3 விழுக்காடாகக் குறைந்தது. ஜனவரியில் அது 3.2 விழுக்காடாகப் பதிவானது.

சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களின் வேலையின்மை விகிதம் 4.3 விழுக்காட்டிலிருந்து 4.1 விழுக்காட்டுக்கு இறங்கியது.

சிங்கப்பூர்க் குடிமக்களுக்கான வேலையின்மை விகிதம் நாலரை விழுக்காட்டிலிருந்து 4.3 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

பிப்ரவரியில் 96,800 குடியிருப்பாளர்கள் வேலையில்லாமல் இருந்தனர் என்றும், அவர்களில் 85,900 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

கிருமிப்பரவலுக்கு முந்திய நிலைக்குச் சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் திரும்பாவிட்டாலும், வேலை உருவாக்கத்தில் நாடு நல்ல முன்னேற்றம் கண்டுவருவதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபீன் தியோ தமது Facebook பக்கத்தில் பதிவிட்டார்.

அமைச்சு அண்மையில், 27,000 முதலாளிகளுக்கு
வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் வழங்குதொகை அளித்ததைத் திருமதி Teo சுட்டினார்.

திட்டம் தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் அந்த முதலாளிகள் 130,000 உள்ளூர்வாசிகளை வேலையில் அமர்த்தியதாக அவர் தெரிவித்தார்.

வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அது 5 மாதங்கள் நீடிக்கவிருந்தது.

2021 வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதலாக 5.2 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டு அது தற்போது வரும் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் பணியமர்த்த ஊக்குவிக்கும் சம்பள மானியத் திட்டம் அது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்