Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென் கொரியாவுக்குச் செல்லும் கல்வி பயணங்களை ரத்து செய்யும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்

சிங்கப்பூரின் சில பல்கலைக்கழகங்கள் தென் கொரியாவுக்கு மேற்கொள்ளவிருந்த கல்விப் பயணங்களை ரத்து செய்துள்ளன.

வாசிப்புநேரம் -
தென் கொரியாவுக்குச் செல்லும் கல்வி பயணங்களை ரத்து செய்யும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்

(கோப்புப் படம்)

சிங்கப்பூரின் சில பல்கலைக்கழகங்கள் தென் கொரியாவுக்கு மேற்கொள்ளவிருந்த கல்விப் பயணங்களை ரத்து செய்துள்ளன.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகியவை தென் கொரியாவுக்குக் கல்வி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன.

அதற்குப் பதிலாக மாற்று நடவடிக்கைகளை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்வதாக அந்தப் பல்கலைக்கழகங்கள் தெரிவித்தன.

உள்ளூரில் பயில்வதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தருவதில் கைகொடுப்பதையும் பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

தென் கொரியாவின் விழிப்புநிலை உச்சத்துக்கு உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு பயண அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதையடுத்து பல்கலைக்கழகங்கள் தென் கொரியாவுடனான திட்டங்களை ரத்து செய்துவிட்டன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்