Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொழிலாளர் இயக்கத்திற்கும் ஊழியர்களுக்கும் பலவகையில் பங்காற்றிய மறைந்த திரு முத்துக்குமாரசாமிக்கு விருது - மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் லீ

கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் படிப்படியாகத் தளர்த்தப்படவிருக்கும் வேளையில், அரசாங்கம், தொழிலாளர் இயக்கம், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்புப் பங்காளித்துவம் வர்த்தகங்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
தொழிலாளர் இயக்கத்திற்கும் ஊழியர்களுக்கும் பலவகையில் பங்காற்றிய மறைந்த திரு முத்துக்குமாரசாமிக்கு விருது - மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் லீ

(படம்: Facebook/Lee Hsien Loong)

கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் படிப்படியாகத் தளர்த்தப்படவிருக்கும் வேளையில், அரசாங்கம், தொழிலாளர் இயக்கம், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்புப் பங்காளித்துவம் வர்த்தகங்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாண்டுக்கான மே தின விருதுகள் குறித்து அவர் தமது Facebook பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மே தின விருதுகளை வென்ற தொழிற்சங்கவாதிகள் அனைவருக்கும் அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த மூவருக்கு Comrade of Labour எனும் தொழிற்சங்கவாதிகளுக்கான ஆக உயரிய விருது வழங்கப்பட்டது.

உணவு, பானத்துறை ஊழியர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கான சங்கத்தின் (Food, Drinks and Allied Workers Union) பொதுச் செயலாளர் டான் ஹோக் சூன், உலோகத் தொழில்துறை ஊழியர்கள் சங்கத்தின் (Metal Industries Workers' Union) ஆலோசகர் டான் ஹோக் போ, பெட்ரோலியத் துறை ஊழியர்கள் சங்கத்தின் (United Workers Of Petroleum Industry) நிர்வாகச் செயலாளர் கார்த்திகேயன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.

அவர்கள் தங்களது பல ஆண்டு அனுபவத்தைக் கொண்டு, துறை சார்ந்த மற்றவர்களுக்கு, COVID-19 சூழலின் சவால்களை எதிர்கொள்ள உதவினர் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

பொதுத்துறை நாட்சம்பள ஊழியர்களுக்கான கூட்டுத்  தொழிற்சங்கத்தின் (Amalgamated Union of Public Daily Rated Worker) முன்னாள் பொதுச் செயலாளர் திரு. முத்துக்குமாரசாமிக்கு Comrade of Labour விருதளித்துச் சிறப்பிக்கப்பட்டது.

தொழிலாளர் இயக்கத்திற்கும் ஊழியர்களுக்கும் பல்வேறு வகையில் பங்காற்றிய அவர், கடந்த நவம்பர் மாதம் காலமானார்.

அவருக்கு விருதளித்து கௌரவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்ததாகப் பிரதமர் லீ கூறினார்.

சிங்கப்பூர் ஊழியர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் COVID-19 கிருமிப்பரவல் ஒரு சவால்மிக்க சூழலை உருவாக்கியுள்ளது, இருப்பினும் அதை ஒன்றிணைந்து கடந்துவிடலாம் என்று திரு லீ நம்பிக்கை தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்