Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வசதி குறைந்த மாணவர்கள் தவறாமல் பள்ளிக்குச் செல்ல ஊக்குவிக்கும் திட்டம்

வசதி குறைந்த மாணவர்கள் தவறாமல் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்க கூடுதல் ஆதரவு வழங்கப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -
வசதி குறைந்த மாணவர்கள் தவறாமல் பள்ளிக்குச் செல்ல ஊக்குவிக்கும் திட்டம்

படம்: Channel NewsAsia

வசதி குறைந்த மாணவர்கள் தவறாமல் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்க கூடுதல் ஆதரவு வழங்கப்படவுள்ளது.

பள்ளி-சமூக ஆதரவை ஒன்றிணைக்கும் அந்த மூவாண்டுத் திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

குடும்பங்களை ஊக்குவிக்கவும், மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறவும், அமைக்கப்பட்டுள்ள பணிக்குழுவான UPLIFT -இன் முயற்சி அது.

சென்ற ஆண்டு, ஆயிரம் தொடக்கப்பள்ளி மாணவர்களில் ஒருவர், சரியான காரணம் இல்லாமல் 60 நாள்களுக்குப் பள்ளிக்குச் செல்லவில்லை.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே அது ஆயிரத்தில் சுமார் 8ஆக இருந்தது.

முன்னோடித் திட்டத்தின் கீழ், பள்ளிக்கு நீண்ட காலம் செல்லாமல் இருக்கும் 300க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க உதவிகள் வழங்கப்படும்.

முதற்கட்டமாக உட்லண்ட்ஸ், கிரேட்டா ஆயர், பூன் லே ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவி வழங்கப்படும்.

பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் பிள்ளைகளின் போக்கு, அவர்களிடம் காணப்படும் பொதுவான அறிகுறிகள் ஆகியவற்றைத் தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் காணும்.

UPLIFT ஒருங்கிணைப்பாளருடன் இணைக்கப்படும் அந்த மாணவர்களுக்கு, ஏற்ற திட்டங்களும் வளங்களும் பரிந்துரைக்கப்படும்.

பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கும் பிள்ளைகளுக்குப் பொதுவாக வீட்டில் சிரமங்கள் இருக்கலாம். அதுபோன்ற சூழலில் உள்ள பிள்ளைகளுக்கு புதிய UPLIFT திட்டம் கூடுதல் உதவி வழங்கும்.

மாணவர்களின் வீட்டுப் பாடங்களை மேற்பார்வையிடுவது, படிப்பில் உதவுவது ஆகியவற்றில் மாணவர்கள் உதவி பெறக்கூடும்.

கலை, விளையாட்டு போன்ற அம்சங்களில் மாணவர்கள் மேம்படவும் வாய்ப்புகள் வழங்கப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்